நாக்பூரில் கொட்டித்தீர்த்த கனமழை - தண்ணீரில் மிதக்கும் வாகனங்கள்

0 1257

மஹாராஷ்ட்ர மாநிலம் நாக்பூரில் பெய்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றது.

அம்பாஜாரி ஏரி உடைந்து அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் இடுப்பளவுக்கும் மேலே தண்ணீர் நுழைந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கித்தவித்த 6 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.

ராம்தாஸ்பேத் கால்வாய் சாலை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

நாக்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு படையுடன், தேசிய பேரிடர் மீட்பு படையும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments