கேரளாவில் நிபா வைரஸ் ஆபத்து நீங்கியதால் கட்டுப்பாடுகள் தளர்வு

0 1616

கேரளாவை அச்சுறுத்தி வந்த நிபா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு புதிய நிபா வைரஸ் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதுவரை மொத்தம் 6 பேருக்கு மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கோழிக்கோடு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

கடைகள் இரவு 8 மணி வரை திறக்கவும் வங்கிகள் 2 மணி வரை செயல்படவும் அரசு அனுமதியளித்துள்ளது. வடகரை தாலுக்காவில் 9 ஊராட்சிகள் கட்டுப்பாடு உள்ள பகுதிகளாக இருந்த நிலையில் அவற்றின் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.

கோழிக்கோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 7 வார்டுகளிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆயினும் பொதுமக்கள் முகக்கவசம் அணியும்படியும் ,கைகளை சுத்தம் செய்யும்படியும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments