பிரான்ஸில் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் வேலை நிறுத்தம்... புதிதாக அறிமுதப்படுத்தப்பட்டுள்ள ஐபோன்-15 விற்பனை பாதிப்பு
ஐபோன்-15 சீரிஸ் போன்கள் இன்று விற்பனைக்கு வந்துள்ள நிலையில், பிரான்ஸில் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் விற்பனை பாதிக்கப்பட்டது.
அவர்கள் 7 சதவீத ஊதிய உயர்வு கோரிவந்த நிலையில், நான்கரை சதவீதத்திற்கு மேல் வழங்க முடியாது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்ததால் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
மழையையும் பொருட்படுத்தாமல் ஐபோன் 15 வாங்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதிக கதிர்வீச்சை வெளியிடுவதாக குற்றம் சாட்டி ஐபோன் 12 சீரீஸ் போன்களை விற்க பிரான்ஸ் அரசு தடை விதித்திருந்த நிலையில், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ஐபோன் 15 விற்பனையும் பாதிக்கப்பட்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Comments