சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2வது நாளாக சட்டமன்றத்தில் போராட்டம்
சந்திரபாபு நாயுடு கைது விவகாரத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திர சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
ஆந்திர சட்டப்பேரவை வியாழன்று கூடியதும் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சந்திரபாபு நாயுடுவின் மைத்துனரும் நடிகருமான பாலகிருஷ்ணா உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வெள்ளியன்று அவை கூடியதும் சென்ற பாலகிருஷ்ணா, விசில் ஒன்றை கொண்டு வந்து இடைவிடாமல் ஊதி சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்தார்.
இதனிடையே, தம் மீதான 371 கோடி ரூபாய் ஊழல் வழக்கை ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறுபுறம், சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை 24 ஆம் தேதிவரை நீட்டித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments