பிரேசிலில் 1988-ம் ஆண்டில் வசித்த நிலத்தை மட்டுமே பழங்குடி மக்கள் உரிமை கோர முடியும் - பிரேசில் உச்சநீதிமன்றம்
பிரேசிலில் பழங்குடி மக்களின் நில உரிமைகளை பறிக்கும் விதமாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
பழங்குடி மக்கள் 1988 ஆம் ஆண்டில் வசித்த நிலத்தை மட்டுமே அவர்கள் உரிமை கோர முடியும் என முன்னாள் அதிபர் பொல்சனரோவின் ஆட்சியின் போது சட்டம் இயற்றப்பட்டது.
1965-ஆம் ஆண்டு முதல் 1985-ஆம் ஆண்டு வரை பிரேசிலில் நீடித்த ராணுவ ஆட்சியின்போது ஏராளமான பழங்குடி மக்கள் நிலங்களை விட்டு விரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே 1988-ஆம் ஆண்டு என்ற வரையறையை மட்டும் அளவீட்டாக கொண்டால், தங்கள் நில உரிமைகள் பறிபோகிவிடும் எனக் கூறி பழங்குடி மக்கள் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
தற்போதைய இடதுசாரி அதிபரான லூயிஸ் இனாசியோவால் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அந்த வரையறையை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதனை பழங்குடி மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
Comments