கடன் வாங்கி பயிரிட்டும் நிலக்கடலை மற்றும் முள்ளங்கி விளைச்சல் இல்லை... அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என விவசாயி கோரிக்கை
விவசாயம் இல்லை என்றால் காலை உணவு திட்டத்தில் எப்படி சோறு போட முடியும்? என கேள்வி எழுப்பிய விவசாயி ஒருவர் பாதிக்கப்படும் விவசாயிகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் கள்ளியூரில், கே.டி. எக்ஸ் 126, 726 ரக முள்ளங்கி விதைகளை வாங்கி தான் பயிரிட்டதாகவும், அவை தரமில்லாததால் இழப்பை சந்தித்துள்ளதாகவும் விவசாயி தெரிவித்தார்.
பீடி சுற்றுவதில் கிடைக்கும் கூலிப்பணத்தைக் கொண்டும், கடன் வாங்கியும் நிலக்கடலை பயிரிட்டும் போதிய விளைச்சல் இல்லையென கள்ளியூரைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர்.
தற்போதைய விளைச்சல் விதைக்கு கூட தேறாது எனவும், ஓட்டுக் கேட்டு வரும் ஒருவரும் விவசாயிகளின் குறைகளை கேட்பது இல்லையெனவும் தெரிவித்தனர்.
மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயை வைத்து அரிசி வாங்கலாம் என்று பார்த்தால் அதுவும் எங்களுக்கு கிடைக்கல நாங்க எத வச்சி விவசாயம் பண்றது?. எங்கள எந்த அதிகாரியும் எட்டி பார்ப்பது இல்லை எனவும் வேதனை தெரிவித்தனர் .
Comments