சென்னையில் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியிடம் கத்திமுனையில் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது
சென்னை, அண்ணாநகரில் தனியாக வசிக்கும் 76 வயது மூதாட்டியிடம் கத்திமுனையில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம், ஏழு சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 13ஆம் தேதி, மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த மர்மக்கும்பல் தூங்கிக் கொண்டிருந்த சுஜாரிதா மற்றும் வேலைக்காரப் பெண் மகாலட்சுமி ஆகியோரை மிரட்டி கொள்ளையடித்து சென்றதையடுத்து, சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை பிடித்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் அருள் என்பவர் மூதாட்டி தனியாக வசிக்கும் தகவலை விக்னேஸ்வரன், சூர்யா ஆகியோரிடம் தெரிவித்து கொள்ளைக்கு திட்டம் போட்டதாக கூறப்படுகிறது.
Comments