காவிரி விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகம் மதிக்கும்: துரைமுருகன் நம்பிக்கை
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடும் என நம்புவதாகவும், அதனால், குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியும் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோட்டூர்புரத்தில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 5 ஆயிரம் கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்கு ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
Comments