தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி - உச்சநீதிமன்றம்
தீபாவளி பண்டிகையின் போது சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம் எனவும், பட்டாசு வெடிப்பதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2 மணி நேர அனுமதியே தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரவெடி மற்றும் பேரியம் மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உத்தரவில் எந்த மாற்றமும் இல்லையெனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
Comments