விநாயகர் சிலைகளை கரைத்தபோது சிலையின் கழுத்தில் இரண்டரை சவரன் தங்க சங்கிலி... உரியவர்களிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

0 77593

பழனியில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சண்முகநதியில் கரைக்கப்பட்டது. மாலையில் துவங்கிய பேரணி இரவு வரை நடை பெற்றது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன

 வேலூரில் காங்கேயநல்லூர் பகுதியில் நடைபெற்ற டி.ஜே நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என ரோந்து வந்த விருதம்பட்டு உதவி ஆய்வாளர் நிறுத்தியதால் அப்பகுதி இளைஞர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 காஞ்சிபுரம் வேதாசலம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் செவிலிமேடு ஏரியில் விநாயகர் சிலைகளை கரைத்தபோது சிலையின் கழுத்தில் இரண்டரை சவரன் தங்க சங்கிலி உள்ளதை கண்டெடுத்தனர். போலீசார் மூலம் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

வீட்டில் விநாயகருக்கு தங்கச்சங்கிலி போட்டு பூஜை செய்துவிட்டு அப்படியே கரைக்கக் கொடுத்தனுப்பியது விசாரணையில் தெரிய வந்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments