கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியாவுக்கு ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு
கனடாவுடன் இணைந்து பணியாற்றுமாறு இந்தியாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
குற்றச்சாட்டுகளைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு சட்டம் தனது கடமையைச் செய்ய ஒத்துழைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கனடா குடிமக்களின் பாதுகாப்பு தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறிய அவர் கனடா பாதுகாப்பான நாடு என்று தாம் உறுதியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காலிஸ்தான் ஆதரவாளர் கொல்லப்பட்டது குறித்து ஜி 20 மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் மனம் திறந்து உரையாடியதாகக் கூறிய ட்ரூடோ, அதன் பின்னணியை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.
Comments