கூகுள் மேப்பை பின்பற்றி உடைந்த பாலத்தின் விளிம்பில் 20 அடி உயரத்திலிருந்து காருடன் விழுந்த நபர் பலி

0 2363

அமெரிக்காவில் கூகுள் மேப்பை பின்பற்றி உடைந்த பாலத்தின் மீது காரில் சென்ற நபர், பாலத்தின் விளிம்பில் 20 அடி உயரத்திலிருந்து காருடன் விழுந்து பலியானதால் கூகுள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த நபரின் மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், பாலம் உடைந்து ஓராண்டுக்கும் மேலாக பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக கூகுளுக்கு பலர் தகவல் கூறியும், அது கூகுள் மேப்பில் அப்டேட் செய்யப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

தனது கணவரின் மரணத்திற்கு பின்னரும், கூகுள் மேப் அப்டேட் செய்யப்படவில்லை என்றும், உடைந்த பாலத்தில் பயணிக்க தொடர்ந்து வழிகாட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தவறு குறித்து மதிப்பாய்வு செய்து வருவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments