சென்னை - திருநெல்வேலி இடையே தொடங்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது
சென்னை - திருநெல்வேலி இடையே தொடங்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை எழும்பூரில் இன்று காலை 7.35-க்குப் புறப்பட்ட ரயில், விழுப்புரம், திருச்சி வழியே பிற்பகல் 3.13 மணிக்கு திருநெல்வேலி வந்து சேர்ந்தது.
திட்டமிட்டதைவிட பத்து நிமிடங்கள் முன்னதாகவே ஏழு மணி 40 நிமிடங்களில் திருநெல்வேலி வந்து சேர்ந்த ரயிலை, ரயில்வே பயணிகள் சங்கத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.
பொதுமக்கள் அந்த ரயிலில் ஏறி அதன் சிறப்பு அம்சங்களைப் பார்த்து ரசித்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயிலான இதை, வருகிற 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் துவக்கி வைக்கிறார்.
8 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 608 பேர் பயணம் செய்ய முடியும். திருநெல்வேலியில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு சென்னைக்கு பிற்பகல் 1.50-க்கும், மதியம் 2.50-க்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 10.40-க்கு திருநெல்வேலியை சென்றடையும்.
விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
சேர் கார் பெட்டியில் பயணிக்க 1300 ரூபாயும், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டியில் பயணிக்க 2300 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாள் முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments