இந்திய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சர்வதேச அமைப்பின் அங்கீகாரம்
இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பயிற்சி பெறவும், அதன்பின் மருத்துவ சேவை செய்யவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்திய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு, உலக மருத்துவக் கல்வி கூட்டமைப்பின் அங்கீகாரம் கிடைத்துள்ளதை அடுத்து இந்த வாய்ப்பு உருவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அடுத்த பத்து ஆண்டுகளுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தால், இந்தியாவில் உள்ள 706 மருத்துவக் கல்லூரிகளும் பலன் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்க முடியும். உலக அளவில் மருத்துவப் படிப்பை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தும் பணிகளில் உலக மருத்துவக் கல்வி கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டமைப்பின் அங்கீகாரத்துக்காக ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் சுமார் 50 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
Comments