நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அம்மசோதா மீதான விவாதத்தின்போது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்தும், அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்தும் பேசினர்.
இதனைத் தொடர்ந்து மசோதாவை நிறைவேற்ற வாக்குச்சீட்டு மூலம் வாக்கெடுப்பு நடைபெற்றது. மசோதாவிற்கு ஆதரவாக 454 எம்.பி.க்களும், 2 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
வியாழக்கிழமையன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மசோதாவை சில கட்சிகள் அரசியலாக்கப் பார்ப்பதாக குற்றஞ்சாட்டினார். மசோதாவின் நீண்ட பயணம் பா.ஜ.க. ஆட்சியில் முழுமை பெறுவதாகவும், இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு நீதி கிடைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments