பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்கள் மூளையில் சோதனை செய்ய நியூராலிங்க் நிறுவனம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அழைப்பு
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மூளையில் பொருத்தும் வகையில் தயாரித்துள்ள சிப்களை மனிதர்களிடம் சோதனை செய்ய அனுமதி கிடைத்துள்ளது.
எண்ணங்களைச் செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்குமான இணைப்பை உருவாக்கும் வகையிலான சிப்பை நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் மூளையில் இந்த சிப்பை பொருத்தி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
சுமார் ஆறு ஆண்டுகாலம் மேற்கொள்ளப்பட உள்ள இந்த சோதனையில் தாமாக முன்வந்து கலந்துகொள்ள விண்ணப்பிக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நியூராலிங்க் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
கழுத்துப் பகுதி தண்டுவடம் அல்லது ஏ.எல்.எஸ். பகுதியில் அடிபட்டதால் பக்கவாத பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் மூளையில் ரோபோட் மூலம் சிப் பொருத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
சோதனையின்போது இத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடும் மதிப்பீடு செய்யப்பட உள்ளது.
Comments