காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனுத் தாக்கல்
தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு தாக்கல் செய்துள்ளது.
போதுமான மழை இல்லாததால் எங்களது தேவைக்கே தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க இயலாது எனவும் மனுவில் கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று காலை கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பது குறித்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அவசர மனுவும், காவிரி விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களும் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ள நிலையில் தங்களது மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
Comments