இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

0 4346

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலை விவகாரத்தில் இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவில் செய்தியாளர்களை சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜார் கொலை விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிராக கனடா எந்த தூண்டுதலிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார்.

இந்தியாவுடன் மோதல் போக்கு இல்லை என்றும், இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகம் கூறினார்.

ஹர்தீப் சிங் நிஜார் கொலை விவகாரத்தை முக்கியத்துவம் அளித்து இந்தியா அணுக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கனடாவின் ஜனநாயகக் கொள்கைகளை பின்பற்றி, ஆதாரங்களின் அடிப்படையில் அமைதியாக இப்பிரச்சனையை கனடா கையாளும் என்றும் ட்ரூடோ குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments