தம்பி இத மெரீனா பீச் மணல்ல எழுதிட்டு பக்கத்துல உட்காந்துக்க..! TTF வாசன் சொன்ன விளக்கம்

0 3685

விபரீத வாகன சாகசம் செய்து விபத்தில் சிக்கிய TTF வாசன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , கேட்போரை அசரவைக்கும் வகையில் விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கோவையை சேர்ந்த TTF வாசன் சென்னை வழியாக மகாராஷ்டிராவிற்கு தனது சுசுகி ஹயபுசா அதிவேக பைக்கில் செல்லும்போது காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வீலிங் செய்ய முயன்ற போது நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு குப்புற விழுந்து விபத்துக்குள்ளானார்.

விபத்தில் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் அடுத்த மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் சென்னை சென்றார்.

விபத்து சம்பவம் குறித்து பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வாசன் மீது இந்திய தண்டனைச்சடம் 279/336ன் கீழ் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் , பைக் யூடியூப்பர் வாசனை கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வாசன், தான் ஸ்டண்ட் செய்ததால் பைக் விபத்தில் சிக்கவில்லை என்றும்... பைக் தானாக தூக்கியதால் விபத்தில் சிக்கியதாகவும் அனைவரையும் அசர வைக்கும் விதத்தில விளக்கம் ஒன்றை தெரிவித்தார்

22 லட்சம் ரூபாய் யூடியூப் வருமானத்தில் பைக்க வாங்குனோமா, பக்குவமா வண்டிய ஓட்டினோமான்னு இல்லாம இஷ்டத்துக்கு வீலிங் செய்தால் இப்படித்தான் கஷ்டப்பட நேரிடும் என்று காவல் துறையினர் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே யூடியூப்பர் டி.டி.எஃப்.வாசனை வரும் அக்டோபர் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments