மழைநீர் வடிகால் மற்றும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்.. !!
சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளதாக புகார்கள் வருவதாகவும், அமைச்சர்களும், அரசு செயலாளர்களும் இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்,
மாவட்ட ஆட்சியர்கள், புயல், கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை பல்துறை மண்டல குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தினார். சென்னையில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் மற்றும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திடவும் வலியுறுத்தினார்.
Comments