மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தின் நிலையை மக்கள் அறிந்து கொள்ள புதிய இணையதளம் துவக்கம்

0 27961

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், பணம் கிடைக்காதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறிந்திடும் வகையில் தமிழக அரசு ஒரு இணையதளத்தை துவங்கியுள்ளது.

மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் திட்டத்தில், விண்ணப்பித்து பணம் கிடைக்காதவர்கள் அந்த இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளீடு செய்து விண்ணப்ப நிலையை அறிந்துக் கொள்ளலாம்.

குறுஞ்செய்தி கிடைப்பதில் நடக்கும் குளறுபடியை தவிர்க்கவே
இந்த இணைய தளம் துவங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments