ஆதவனை நோக்கிய ஆய்வுப் பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா எல்-1.!
சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்.1 விண்கலம் இன்று அதிகாலை சூரியன்-பூமி L1 பாயிண்ட்டுக்குச் செல்லும் பாதையில் செலுத்தப்பட்டு உள்ளது.
வெற்றிகரமாக 4 முறை புவிசுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டு இன்று முதல் சூரியனை நோக்கி தனது முதல் சுற்று பயணத்தைத் தொடங்கியது. 110 நாட்கள் தொடர்ந்து பயணிக்கும் ஆதித்யா, பூமி-சூரியன் சுற்றுவட்டப்பாதையின் முதல் சுற்றுக்கு உயர்த்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பூமியில் இருந்து, 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் உள்ள, 'லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்1' என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தபடி சூரியனை ஆதித்யா விண்கலம் ஆய்வு செய்யும். பெங்களூரு மற்றும் போர்ட் பிளேரில் உள்ள இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு நிலையங்கள், ஆதித்யாவின் சூரியனை இயக்கச் செயல்பாட்டை கண்காணித்து வருகின்றன.
Comments