ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியில் இருந்து 50,000 கி.மீ. தொலைவில்... ஆய்வுப் பணிளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு
ஆதித்யா எல்-1 விண்கலம் ஆய்வுப் பணிளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த 2ஆம் தேதியன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அந்த விண்கலம், பூமியில் இருந்து 125 நாட்கள் பயணித்து லாக்ராஞ்சியன் புள்ளி ஒன்றை அடைந்து, அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும்.
தற்போது புவி வட்டப்பாதையில் வலம் வந்து கொண்டிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் உயரம் உயர்த்தும் நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படுகின்றன.
4வது சுற்றுப் பாதை உயர்த்தும் பணி கடந்த 15ஆம் தேதி வெற்றிகரமாக நடந்தது. இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் அதிவெப்ப ஆற்றல், அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பூமியில் இருந்து 50 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ஸ்டெப்ஸ் என்ற கருவி செயல்படத் தொடங்கி ஆய்வுகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 சென்சார்கள் கொண்ட இந்த ஆய்வு கருவி வெவ்வேறு திசைகளிலும் தனது ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Comments