நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு... உணவக உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

0 4223

நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், உணவக உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரமத்தி சாலையிலுள்ள ஐவின்ஸ் என்ற அந்த உணவகத்தில் கடந்த சனிக்கிழமை உணவு சாப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் 13 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதே நாளில், அங்கு ஷவர்மாவை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து சாப்பிட்ட 14 வயது சிறுமி கலையரசி என்பவர் உயிரிழந்தார். அவரது தாய், சகோதரர், உறவினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொத்தமாக சனிக்கிழமையன்று இந்த உணவகத்தில் உணவு வாங்கிச் சாப்பிட்ட  43 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐவின்ஸ் உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, உரிமையாளர் நவீன்குமார், சமையலர்கள் சஞ்சய் மற்றும் தபாஸ்குமார் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே மாவட்டம் முழுவதும் ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன்கள் தயார் செய்ய தற்காலிக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments