சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தலையில் கல்லை போட்டு கொலை போலீசார் தீவிர விசாரணை

0 2990

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் கல்லை போட்டு மர்மநபர் கொலை செய்துள்ள நிலையில், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதற்காக கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவிநாசி மங்கலம் புறவழிச் சாலை அருகே உள்ள கடை முன்பாக ஆதரவற்ற பெண் ஒருவர் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒருவன், அப்பெண்ணின் தலையில் கல்லை போட்டது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பெண்ணை அருகில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மழை நீர் வடிகாலுக்கு இழுத்துச் சென்று அந்த மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் எனவும், இதனை அறிந்த நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்வதற்காக கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பின்தான் முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments