அமெரிக்காவில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியை காரால் மோதி... கொலை செய்ததை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய சிறுவன் கைது
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரியை காரால் மோதி கொலை செய்ததுடன், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றிய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
காவல்துறை தலைமை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவரான அண்ட்ரியஸ் கடந்த மாதம் 14-ம் தேதி, காலை 6 மணி வாக்கில் ”சைக்ளிங்” சென்ற போது, கார் ஒன்று வேகமாக வந்து மோதியதால் சாலையில் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொலியில், ஹுண்டாய் காரை வேகமாக ஓட்டிச்செல்லும் 17 வயது சிறுவன் தன் நண்பர்களிடம் இவர் மீது மோதலாமா என கேட்டுவிட்டு வேண்டுமென்றே மோதியது தெரியவந்தது.
Comments