மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் - அதிகாரிகள்
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பது விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு இன்று முதல் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு ஒரு கோடியே 6 லட்சம் பேர் தகுதி பெற்ற நிலையில், ஏற்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
அந்த எஸ்.எம்.எஸ். பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள ஆய்வு செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் எனவும், இந்த நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments