மணிப்பூரில் விடுமுறைக்காக வந்த ராணுவ வீரர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு கொலை.. !!
மணிப்பூரில் ராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நெற்றியில் துப்பாக்கி காயத்துடன் கிடந்த அவர் உடல் இம்பால் கிழக்கே உள்ள கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த 41 வயதான தாங்தாங் கோம் என்ற ராணுவ வீரரை அடையாளம் தெரியாத சிலர் சனிக்கிழமை காலையில் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சியான 10 வயது மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ராணுவ வீரரைக் கொன்றதற்கு காரணம் தனிப்பட்ட பகையா அல்லது தேசவிரோத சக்திகளா என்று விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Comments