"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
'நியோமேக்ஸ்' நிதி நிறுவனத்தின் மீதான ரூ.5000 கோடி மோசடி வழக்கு.. தலைமை நிர்வாக இயக்குனர் சென்னையில் கைது.. !!
நிதி நிறுவன மோசடி வழக்கில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கமலக்கண்ணன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
2010-ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்ட நியோமேக்ஸ் நிறுவனம், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் 5,000 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுவரை பணத்தை இழந்த 300க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ள நிலையில், அது தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.
அவர்களில் 5 பேர் ஜாமீன் பெற்ற நிலையில், தற்போது தலைமை நிர்வாக இயக்குனர்களுள் முக்கியமானவராக கருதப்படும் கமலக்கண்ணன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர்
Comments