தமிழக காவலரை தாக்கிய புதுச்சேரி ஊர்க்காவல் படை வீரர்கள்.. பொதுவெளியில் மது அருந்தியதை கண்டித்ததால் தாக்குதல்.. !!
பொதுவெளியில் மது அருந்தியவர்களை கண்டித்த தமிழக போலீஸாரை துரத்தி துரத்தி தாக்கிய புதுச்சேரி ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு தலைமை காவலர் மணிமாறன், காவலர் தங்கமணி ஆகியோர் மப்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாநில எல்லைப்பகுதியான மேட்டுப்பாளையத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த 3 பேரை அவர்கள் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர்கள் தலைமைக் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் அருகிலுள்ள புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசாரை வரவழைத்தார்.
அவர்கள் அங்கிருந்த 3 பேரையும் பிடித்து ஆரோவில் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் காவலரை தாக்கியவர்கள் ஊர்க்காவல் படை வீரர்களான முனுசாமி, வசந்த் மற்றும் பெட்ரோல் நிலைய ஊழியர் பார்த்திபன் என்பது தெரிய வந்தது. மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
Comments