ஜப்பானுக்கு எதிராக தென்கொரியாவில் தொடரும் போராட்டம்.. ஃபுகுஷிமா அணு உலை கதிரியிக்க சுத்திகரிப்பு நீரை கடலில் வெளியேற்ற எதிர்ப்பு.. !!
ஃபுகுஷிமா அணு உலை கதிரியிக்க சுத்திகரிப்பு நீரை பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றும் ஜப்பானின் நடவடிக்கைக்கு எதிராக தென்கொரியாவில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஃபுகுஷிமா கதிரியக்க நீரை பசிபிக் கடலில் வெளியேற்றும் பணியை கடந்த மாதம் 24-ம் தேதி ஜப்பான் தொடங்கியது.
முதல்கட்டமாக ஆகஸ்டு 24 முதல் கடந்த 11-ம் தேதி வரை, 7 ஆயிரத்து 800 டன் நீர் கடலில் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், இம்மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள ஜப்பானின் இரண்டாம் கட்ட நீர் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்த தென்கொரிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சியோலில் போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர். ஜப்பானின் செயலால் கடல் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
Comments