"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
அமெரிக்காவில் வேகமாக சென்ற காரை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரியை காருக்குள் இழுத்துக்கொண்டு சென்ற ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு.. !!
அமெரிக்காவில், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக காரை நிறுத்திய காவல் அதிகாரியை சாலையில் தரதரவென காருடன் இழுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.
மாசாசூசெட்ஸ் மாநிலத்தில், அதிவேகமாக சென்ற பென்ஸ் காரை நிறுத்திய ரோந்து போலீசார், அதை ஓட்டி வந்த டெரெக் லோபோ-விடம் ஓட்டுநர் உரிமத்தை கேட்டுள்ளனர்.
திறந்திருந்த கார் கதவு வழியாக காவல் அதிகாரியை உள்ளே இழுத்த லோபோ, காரை வேகமாக ஓட்டத் தொடங்கினார். சாலையில் இழுத்து செல்லப்பட்ட காவல் அதிகாரி லோபோவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கீழே விழுந்தார்.
இச்சம்பவத்தில் காவல் அதிகாரி காயமடைந்த நிலையில் தப்பிச் சென்ற லோபோவை மறுநாள் கைது செய்த போலீசார், போதை மாத்திரைகள் வைத்திருந்தது உள்பட 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
Comments