ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் 23 ஆம் தேதி தொடக்கம்.. சீனாவின் ஹாங்சோ நகர் ஒலிம்பிக் மைதானத்தில் தொடக்க விழா ஒத்திகை.. !!

0 663

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா ஆடம்பரம் இல்லாமலும், கார்பன் வெளியேற்றம் இல்லாமலும் நடத்தப்படும் என்று சீனா கூறியுள்ளது.

சீனாவின் ஹாங்சோ நகரில் வரும் 23 ஆம் தேதி தொடங்கும் போட்டிக்கான தொடக்க விழாவில் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் பயன்படுத்தப்படும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேவையான அளவுக்கு மின்னொளி பயன்படுத்தப்பட்டு அலங்கார ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே தொடக்க விழாவில் நடத்தப்பட்ட வேண்டிய நிகழ்ச்சிகளின் ஒத்திகை  ஹாங்சோ நகரில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments