உல்லாசமாக இருக்க மூதாட்டியின் வீட்டை பயன்படுத்த எண்ணிய ஜோடி.. மூதாட்டி ஒப்புக்கொள்ளாததால் கொலை செய்துவிட்டு நகைகளுடன் தப்பியோட்டம்.. !!
நாகையில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் தவறான உறவில் இருந்த ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
நாகை கீரைக்கொல்லைத்தெருவில் தனியாக வசித்து வந்த 67 வயதான மூதாட்டி சரோஜா மர்மமான முறையில் நேற்று உயிரிழந்து கிடந்தார்.
முந்தைய நாள் இரவு அந்த வீட்டுக்கு ஒரு ஆணும் பெண்ணும் வந்து சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததை வைத்து விசாரணையில் இறங்கிய போலீசார், வேளாங்கண்ணியில் பதுங்கியிருந்த காளிதாஸ் - வள்ளிமுத்து ஜோடியை கைது செய்தனர்.
இந்த காளிதாஸ் கொல்லப்பட்ட மூதாட்டியின் தூரத்து உறவினர். காளிதாசின் அண்ணன் மனைவிதான் வள்ளிமுத்து. இருவருக்கும் தவறான உறவு இருந்துள்ளது.
இவர்கள் இருவரும் உல்லாசமாக இருக்க எண்ணி சம்பவத்தன்று நாகையில் உள்ள மூதாட்டி சரோஜா வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இருவரது எண்ணத்தை உணர்ந்த மூதாட்டி, வீட்டை விட்டு வெளியே போக சொல்லி உள்ளார்.
நள்ளிரவு நேரம் என்பதால், வெளியே செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரும், ஒரு கட்டத்தில் சரோஜாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
Comments