பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாள்- இன்று நாடு முழுவதும் கொண்டாட்டம்

0 1304

பிரதமர் மோடியின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி துவாரகா செக்டர் மற்றும் யஷோபூமியை இணைக்கும் வகையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தையும் மோடி திறந்து வைக்கிறார்.

பிரதமரின் விஸ்வகர்மா கௌஷல் சம்மான் யோஜனாவும் பிரதமரின் பிறந்த நாளில் பூஜையுடன் தொடங்கப்பட உள்ளது.கலைஞர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் சிறுவியாபாரிகளுக்கு நிதிவழங்கும் இத் திட்டம் நலிவடைந்த பலருக்கும் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளது.

குஜராத் நவஸாரி மாவட்டத்தில் பாஜகவினர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு 30 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கி வைக்கத்திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments