கோவையில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை 3-வது நாளாக சோதனை..!

0 4845

கோவையில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை 3-வது நாளாக நீடிக்கிறது.

ராமலிங்கா நகரில் உள்ள இ.எஸ்.ஆர். கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கணக்கில் காட்டப்படாத தங்க நகைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட இவை அனைத்தும் கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலக கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீஸ் பாதுகாப்பு உடன் பெட்டிகளை கொண்டு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், பல கோடி ரூபாய் ரொக்கத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments