லிபியாவில் வெள்ளத்தில் சிக்கி 11,300 பேர் பலி - 10,000 பேர் மாயம்

0 1546

லிபிய அரசு 20 ஆண்டுகளாக அணைகளை முறையாக பராமரிக்காததாலேயே அவை உடைந்து 11 ஆயிரம் பேர் உயிரிழக்க நேர்ந்ததாக ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுகிழமை பெய்த கனமழையால், அக்தர் மலையில், வாதி டெர்னா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 2 தடுப்பணைகள் உடைந்தன. பள்ளத்தாக்கில் அமைந்துள்ள டெர்னா நகரில் 23 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அந்நகரின் 25 சதவீத பகுதிகள் கடலுக்கு அடித்து செல்லப்பட்டன.

1970 களில் கட்டப்பட்ட இரு அணைகளும் 20 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உடையும் தருவாயில் உள்ளதாக பல முறை அரசுக்கு தெரிவிக்கப்பட்டபோதும், அப்பகுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இறந்தவர்களில் 3,000 சடலங்கள் டெர்னா நகருக்கு வெளியே ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments