டிசிப்பிளின் இல்லாத ரவுடியை மசாஜ் நிலைய பெண்ணை வைத்து தூக்கிய சம்பவம்..! இன்ஸ்டா மூலம் வலையில் சிக்கினார்..!
சென்னை எழும்பூரில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கல்லூரி மாணவர், மசாஜ் நிலைய பெண் ஊழியர் உள்ளிட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் விவகாரத்தில் டிசிப்பிளின் இல்லாத ரவுடியை இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சினிமா பாணி கொலை சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
இந்த பொண்ண இன்ஸ்டாவில் பார்த்து மயங்கி ... நேரில் பார்ப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த போது வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி புழல் சத்யா இவர் தான்..!
சென்னை எழும்பூரில் கடந்த 10ம் தேதி இரவு ரவுடி புழல் சத்யாவை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது.
எழும்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி நாய் ரமேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. கொலை தொடர்பாக நாய் ரமேஷின் தம்பி ரூபன், அண்ணன் மகன் டேவிட், அருண், புழல் சரவணன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 8ம் தேதி நாய் ரமேஷின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தன்று, நாய் ரமேஷின் உறவினர்கள் அவருக்கு விருப்பமானதை படைத்து கும்பிட்டுள்ளனர். பின்னர் மது அருந்திவிட்டு சத்யாவை கொலை செய்ய சபதம் எடுத்துள்ளனர். அந்த கும்பலில் வடபெரும்பாக்கத்தைச் சேர்ந்த கிஷோர் குமார் என்ற பட்டதாரி இளைஞரும் இருந்துள்ளார். அவரது கல்லூரி படிப்பிற்கு நாய் ரமேஷ் உதவியதால் அவரது கொலைக்கு பழிக்கு பழி வாங்க முனைப்புடன் செயல்பட்டுள்ளார்.
தனக்கு ஏற்கனவே பழக்கமான மசாஜ் நிறுவன ஊழியரான மிசோரம் மாநிலத்தை சேர்ந்த லால் நன் சன் என்கிற ஜூலி என்ற பெண்ணிடம் , ரவுடி புழல் சத்யாவின் இன்ஸ்டாகிராம் ஐடியை கொடுத்து , மேற்கண்ட நபர், தன்னிடம் மூன்று லட்சம் ரூபாய் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றுவதாகவும், அவனிடம் எப்படியாவது பேசி தாங்கள் சொல்லும் இடத்திற்கு வரவழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நட்புக்காக ஒப்புக் கொண்ட ஜூலி, ரவுடி சத்யாவின் இன்ஸ்டாகிராமில் ஹாய் என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.
ஜூலியின் இளம் வயது புகைப்படத்தை கண்டு மயங்கிய ரவுடி சத்யா பதில் மெசேஜ் அனுப்ப , அடுத்தடுத்து நலம் விசாரிப்புகளுடன், இரண்டு மணி நேரத்துக்கும் இருவரும் மனம் விட்டு சாட்டிங்கில் பேசியதாகவும், இதில் ஜூலியின் வலையில் சத்யா சிக்கியதாக கூறப்படுகின்றது.
எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள ஒரு ஸ்பாவில் பணியாற்றுகிறேன். மாலை 7 மணிக்கு வந்தால் நாம் இருவரும் சந்திக்கலாம் என்னக்கூறி சம்பவத்தன்று சத்யாவை ஜூலி வரவழைத்து விட்டு கிஷோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஜூலியை சந்திக்கும் ஆவலில் வந்த சத்யா 2 மணி நேரத்துக்கும் மேலாக அங்கு காத்திருந்த நிலையில் அவன் திரும்பிச்சென்று விடக்கூடாது என்று சாப்பிடுவதற்கு 1000 ரூபாயை ஜி பே மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளார்.
சத்யா சாப்பிட்டு விட்டு வந்து ஜூலியின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த போது தான்
நாய் ரமேஷின் ஆதரவாளர்கள் வந்து சத்யாவை வெட்டி சாய்த்து தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஜூலி, கிஷோர் குமார், போரூர் கல்லூரி மாணவர் ஜீவானந்தம், காஞ்சி சிறிய பணிச்சேரியை சேர்ந்த பிரபாகரன் ஆகிய 4 பேரையும் கூடுதலாக போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சினிமா பாணியில் பெண்ணை வைத்து மயக்கி டிசிப்பிளின் இல்லாத ரவுடியை மற்றொரு கும்பல் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments