நாகர்கோவிலில் 'நடுவுல கொஞ்சம் சாலையைக் காணோம்'.. கார் நின்ற பகுதியை விட்டுவிட்டு புதிய தார்ச்சாலை அமைப்பு..!

0 2590

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்த இடத்தை மட்டும் விட்டு விட்டு மற்ற பகுதிகளில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

வடிவீஸ்வரம் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் இரவு நேரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றின் முன்பு கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதன் உரிமையாளர் எங்கே என்று தெரியாத நிலையில், ஹாண்ட் பிரேக் போடப்பட்டதால் காரை தள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் காரை நகர்த்தாமல் அதனை சுற்றி ஊழியர்கள் சாலை அமைத்தனர்.

நடுவில் கொஞ்சம் சாலையைக் காணோம் என்று அப்பகுதி மக்கள் சர்ச்சையை எழுப்பியதை அடுத்து சாலை பணியாளர்கள் காலையில் மீண்டும் அங்கு வந்து ஜே.சி.பி. இயந்திரம் மூலமாக காரை மேல தூக்கி விடுபட்ட பகுதியில் சாலையை நிரப்பிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments