இப்ப கையில் 1000 ரூபாய்..! கிடைத்த பெண்கள் மகிழ்ச்சி கிடைக்காதவர்கள் ஏமாற்றம்..!

0 2193

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையான 1000 ரூபாய் கிடைக்கப்பெற்ற பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டும் தங்களுக்கு வங்கி அட்டை கொடுக்கவில்லை என்று சில பெண்கள் புகார் தெரிவித்தனர். 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் பலர், மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பது தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதனிடையே, தமிழகத்தில் பல இடங்களில், பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டும் தங்களுக்கு வங்கி அட்டை கொடுக்கவில்லை என்று பெண்கள் புகார் தெரிவித்தனர். தொலைபேசியில் அழைத்ததால், மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக அவர்கள் கூறினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments