சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டது.
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டது.
குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவிலும் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 973 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆதித்யா விண்கலம் இயங்கி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மொரீஷியஸ், பெங்களூரு மற்றும் போர்ட் பிளேர் தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களில் இருந்து ஆதித்யாவின் பயணத்தை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
வருகிற 19ந் தேதியன்று அதிகாலை 2 மணிக்கு அடுத்தகட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் பணி நடைபெறும் எனவும், பூமியின் சுற்றுப்பாதையில் நிறைவுபெற்று ஆதித்யா விண்கலம் லக்ராஜியன் புள்ளியை நோக்கி பயணத்தைத் தொடரும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ஆதித்யா விண்கலத்தை நிறுத்தி, சூரியனின் காந்தப்புலம், சூரியனால் பூமியில் ஏற்படும் மாற்றங்கள், சூரிய புயல் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
Comments