உரிய காலத்தில் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
உரிய காலத்தில் நியாயமான முறையில் பொதுத் தேர்தல்களை நடத்துமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா இடைக்கால அதிபர் ஆரிப் அலிக்கு எழுதிய கடிதத்தில் மனித உரிமைகளை மதிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மக்களின் அடிப்படை உரிமைகளை மதித்து, சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேர்தல் தேதிகள் குறித்த நிச்சயமற்ற நிலை நீடிப்பதால் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.இதனிடையே நவம்பர் 6ம் தேதிக்குள் தேர்தலைநடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஆரிப் அலி கடிதம் மூலம்கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது அந்நாட்டின் அரசியல் சட்டத்தின்படி கட்டாயமாகும்.
எனினும் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதால் தேதிகளை அறிவிப்பதில் தாமதம் நீடிக்கிறது.
Comments