நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநிலம் தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க கேரள அரசு ஆலோசனை
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் பாதிப்பு 5 ஆக அதிகரித்து இரண்டு பேர் உயிரிழந்து விட்ட நிலையில் மேலும் பலர் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களின் ரத்த மாதிரிகள் புனேயில் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
கேரளஅரசு நிபா பரவுவதைத் தடுக்க ஏற்கனவே சில கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. சில குறிப்பிட்ட பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள், அரசுஅலுவலகங்கள் 17ம் தேதிவரை மூடப்பட்டுள்ளன.
ஏழு கிராமங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.முகக்கவசம் அணிவது கைகளை கழுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிபா வைரஸ் மேலும் பரவினால் மாநிலம் தழுவிய லாக் டவுன் அறிவிப்பதைப் பற்றி கேரள அரசு பரிசீலித்து வருகிறது.
Comments