தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதி

0 1675

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலூரில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் மூன்று பேருக்கு டெங்கு உறுதியான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் 20 படுக்கைகளும், சாதாரண வார்டில் என்பது படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் தனியார் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நான்கு பேர் டெங்கு பாதிப்பு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவாரூரில் 11 வயது சிறுமி உள்ளிட்ட நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டு மருத்துவமனையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட் நிலையில், 3 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் 7 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் 44 பேரும், சிக்குன்குனியாவால் 2 பேரும் பாதித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments