பங்களாதேஷில் முகமதுபூர் சந்தையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து... 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள முகமதுபூர் சந்தையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல நூறு கடைகள் சேதம் அடைந்தன. சமையல் எண்ணெய், பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் வேகமாக பரவிய தீயை, ராணுவம் மற்றும் தீ அணைப்பு வீரர்கள் இணைந்து 6 மணி நேரம் போராடி அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள தீ அணைப்பு துறையினர், கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பே விபத்து ஏற்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
Comments