நடிகையின் பாலியல் தொடர்பான வழக்கில் சீமானுக்கு மீண்டும் சம்மன்... வரும் 18ஆம் தேதி காலை 11 மணிக்கு சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகிறார்

0 1278

நடிகையின் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு 2வதாகக் கொடுக்கப்பட்ட சம்மனின் பேரில் வரும் 18ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவுள்ளார்.

ஏற்கனவே போலீசார் அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாத சீமான், தனது வழக்கறிஞரை அனுப்பி வைத்தார். இந்த நிலையில் பாலவாக்கத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார், நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு இரண்டாவது முறையாக சம்மன் வழங்கினர்.

நீதிமன்றத்தை நாடவுள்ளதால் சம்மனைப் பெற சீமான் மறுத்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது வழக்கறிஞர் சம்மனைப் பெற்றுக் கொண்டார்.

நாளை கட்சியின் கலந்தாய்வு கூட்டம் இருப்பதால் 18ஆம் தேதி காலை 11 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாலியல் புகார் கூறி, தன்னைப் பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி வரும் நடிகையிடம் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சீமான் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகையுடன் வலம் வரும் தமிழர் முன்னேற்றப் படை அமைப்பைச் சேர்ந்த வீரலட்சுமிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இருவரும் 15 நாட்களுக்குள் பொதுவெளியில் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments