கோவிலில் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல்... முன்னாள் அதிமுக எம்எல்ஏ உறவினர் வாகனம் எரிப்பு

0 2174

மதுரை அருகே முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் உறவினர்கள் வீடுகளில் இருந்த கார் மற்றும் சரக்கு வாகனங்கள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவிலின் உற்சவ விழாவின் போது கோவிலில் மரியாதை அளிப்பதில் கருவனூர் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் பொன்னம்பலம் வீடு தாக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் பொன்னம்பலம் ஆதவராளர்கள் ஜாமினில் வெளிவந்தனர். வேல்முருகன் தரப்பினருக்கு ஜாமீன் கிடைக்க வில்லை.

இந்நிலையில் கருவனூர் கிராமத்தில்  அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம் பலத்தின் உறவினர்களாக பிரபு மற்றும் வேலுமணி ஆகியோரின் வீடுகள் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் சரக்கு லாரிகள் மீது மர்ம நபர்கள் திடீரென இரவில் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

கருவனூர் கிராமத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மோதல்கள் கார் எரிப்பு சம்பவங்கள் நீடித்து வருவதால் அங்கு  ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments