2 குழந்தைகளைக் கொன்று கணவன்- மனைவி தற்கொலை... ஆன்லைன் செயலி மூலம் லோன் எடுத்ததால் விபரீதம்

0 2825

கேரள மாநிலம் கொச்சியில்  ஆன்லைன் செயலி மூலம் லோன் எடுத்த சம்பவத்தில்  பெண்ணின் படத்தை மார்பிங் செய்து சிலருக்கு அனுப்பியதால் தனது இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

கடம்பக்குடியைச் சேர்ந்த நிஜோ- சில்பா தம்பதியினர் தங்களின் இரு குழந்தைகளுடன் குடும்ப வீட்டில் மேல் மாடியில் வசித்து வந்துள்ளனர். தரைதளத்தில் நிஜோவின்  தாயார் மற்றும் சகோதரனின் குடும்பம் வசித்து வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் தரை தளத்திற்கு நிஜோவின் குழந்தைகள் செல்லும் நிலையில் காலையில் குழந்தைகள் வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த நிஜோவின் தாயார் மேல் மாடிக்கு சென்று பார்த்தபோது  குழந்தைகள் இருவரும் கட்டிலில் சடலமாகவும், கணவனும் மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிஜோவின் குடும்பத்திற்கு ஏற்கனவே கடன் சுமை இருந்து வந்ததும் அவரது மனைவி செல்போனில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டுள்ள செயலி மூலம் கடன் வாங்கியுள்ளதும்  தெரிய வந்துள்ளது.

மேலும் செயலி மூலம் கடன் வழங்கும் மர்ம கும்பல் கடனை சரியாக செலுத்தவில்லை எனக்கூறி நிஜோவின் மனைவியின் படத்தை மார்பிங் செய்து சிலருக்கு அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட அவமானத்தால் குழந்தைகள் இருவரையும் கொலை செய்து கணவனும் மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments