தீராத காதல் போதை கணவன் தலையில் கல்லை போட்ட பெண்ணுக்கு ஆயுள்..! ஜெயிலுக்கு செல்ல மறுத்து அடம்

0 3239

முறைதவறிய காதலுக்காக கணவன் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்து ,சடலத்தை குடி நீர் கிணற்றில் வீசிய மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த நிலையில் ஜெயிலுக்கு செல்ல மறுத்து அந்த பெண் நீதிமன்றத்தில் கதறி அழுது அடம்பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

செய்யுறது எல்லாம் செஞ்சி புட்டு.. தனக்கு எதுவுமே தெரியாத மாதிரி அழுது அடம் பிடிக்கும் இந்த அம்மையார் யார் தெரியுமா ?.... கணவன் தலையில் கல்லைபோட்டு கொன்றதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அமலா..!

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி இவரது மனைவி அமலா . காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 24 ந்தேதி வீட்டில் இருந்து மாயமான விநாயக மூர்த்தி அங்குள்ள குடி நீர் கிணற்றில் சடலமாக மிதந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. சிப்காட் போலீஸ் விசாரணையில்

விநாயகமூர்த்தியின் சித்தப்பா மகன் ரமேஷ்வுடன் ஏற்பட்ட விபரீத காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை அமலாவும், ரமேஷும் சேர்ந்து தலையில் கல்லைபோட்டு கொலை செய்ததும், சடலத்தை மறைப்பதற்காக அருகில் உள்ள கிணற்றில் தள்ளி விட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ், அமலா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இரு மகன்கள் இருக்கும் நிலையில் கண்ணை மறைத்த காதல் போதையில் அமலா செய்த இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு ராணிப்பேட்டை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தகாத உறவை தட்டிக்கேட்ட கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி அமலா, காதலன் ரமேஷ் ஆகிய இருவருக்கும் 302 பிரிவின் கீழ் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், 201 பிரிவின் கீழ் கிணற்றில் சடலத்தை வீசி தடயத்தை அழிக்க முயற்சித்ததாக கூடுதலாக 7வருடம் சிறை தண்டனையும் ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் பரபரப்பு தீர்ப்பளித்தார்.

தீர்ப்பைக்கேட்டதும்.... கதறித்துடித்த அமலா தனது மகன்களை பிரிய மனமில்லாமல் கட்டிப்பிடித்து முத்தமிட்டார்

போலீசாரிடம் தான் தனது மகன்களிடம் நிறைய பேச வேண்டும் , ஜெயிலுக்கு வர மாட்டேன் என்று அடம்பிடித்தார்

தன்னை செய்தியாளர்கள் படம் பிடிப்பதை கண்டதும் முகத்தை மூடிக் கொண்டு , கையை திருகிக்கொண்டு போலீசுடன் செல்ல மறுத்து அமலா அடாவடி செய்தார்

அமலா அழுது கொண்டே முக்காடுடன் செல்ல, அவரது காதலன் ரமேஷ் அமைதியாக போலீசாருடன் ஜெயிலுக்கு புறப்பட்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments