லிபியாவில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் வேதனையளிப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்
லிபியாவில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து மிகவும் வேதனைப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், இந்த கடினமான நேரத்தில் இந்தியா அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார். லிபியாவில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர்.
மேலும் 10 ஆயிரம் பேரை காணவில்லை. அவர்கள் கடல் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது இடிபாடுகளில் பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
டெர்னா நகரில் குவியல் குவியலாக குவிந்துக் கிடக்கும் சலங்களை ஒரேயடியாக அடக்கம் செய்ய பெரிய பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ளன.சுமார் 30 ஆயிரம் பேர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர்.
Comments